கீழக்கரை, ஜூலை 20:பாம்பனை சேர்ந்த இம்ரான் (42) வேலைக்காக துபாய் சென்றுள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஊர் திரும்ப முடியாமல் 5 வருடமாக துபாயில் இருந்துள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. துபாயில் உரிய ஆவணங்கள் இல்லாமல் உடல் நலம் குன்றி இருந்த அவர், இந்திய துணை தூதரகத்தை அணுகினார். இந்நிலையில் கடந்த மே மாதம் ஈமான் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபீபுல்லாஹ் கான் வழிகாட்டுதலில் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹாமீது அழைத்து ஈமான் சார்பில் வேண்டிய உதவிகளை செய்ய கேட்டு கொண்டனர். இந்நிலையில் சுலைமான் மூலம் துபாய் அரசு மருத்துமனையில் 2 மாதம் அனுமதிக்கப்பட்ட இம்ரான் இறந்தார்.
துபாய் ஈமான் சார்பில் அவரது உடலை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிகளை பொது செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் தலைமையில் சுலைமான் மேற்கொண்டார். சில வாரத்திற்கு முன்பு அவரது உடல் துபாயிலிருந்து திருச்சி சென்று பின்னர் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது. வெளிநாட்டில் உயிரிழக்கும் தமிழக தொழிலார்கள் உடலை ஊர் கொண்டு வர முடியாமல் பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அயலகத் துறை மூலம் உதவிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



