திருப்புத்தூர், ஆக.19: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் நாக நர்மதா கேட்டுக் கொண்டுள்ளார்.
+
Advertisement



