Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண்டபம், ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் கடத்தல், குற்றசம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும்

மண்டபம், ஜூலை 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடலோர பகுதி இலங்கை அருகே அமைந்துள்ளது. இதனால் இப்பகுதி வழியாக தொடர்ந்து கடத்தல் பொருட்களை கடத்தல்காரர்கள் இலகுவாக கடத்திச் செல்கின்றனர். இந்த கடத்தல் பொருட்களான பீடி இலைகள், மஞ்சள், கைலிகள், அழகு சாதன பொருள்கள் டன் கணக்கில் கடத்துகின்றனர். அதுபோல கஞ்சா மற்றும் போதை பவுடர்கள், வலி நிவாரணி மாத்திரைகள் போன்ற போதை பொருட்களை இலகுவாக கடத்தி செல்கின்றனர். இந்த பொருள்களை கடலோரப் பகுதி அருகாமையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மூலம் கொண்டு வருகின்றனர். பின்னர் கடலோரப் பகுதியான வேதாளை, மண்டபம், மரைக்காயர் பட்டிணம், பாம்பன், தங்கச்சிமடம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற கடலோரப் பகுதியிலிருந்து நாட்டு படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்கின்றனர்.

இந்த கடத்தல் சம்பவங்களை முற்றிலும் மாவட்ட நிர்வாகம் தடுத்து வந்தாலும் கடத்தல்காரர்கள் காவல்துறை கண்ணில் மண்ணைத் தூவி இலங்கைக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில கடத்தல் பொருட்களை கடலிலேயும், இலங்கை கடற்கரை பகுதியிலும் வைத்து இலங்கை கடற்படையினர் கைப்பற்றி கடத்தல்காரர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் இந்திய அரசும், இலங்கை அரசும் எவ்வளவு தடுத்து வந்தாலும் கடத்தல் சம்பவம் நடந்து கொண்டே தான் வருகிறது. மண்டபம் ராமேஸ்வரம் கடல் வழியாக கடத்தல் பொருட்களை தடுப்பதற்கு வாகனங்களில் கொண்டு செல்லும் கடத்தல் பொருட்களை கடத்தி செல்லும் வாகனங்களை சாலையிலே தடுத்து விட்டால் கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் குறைவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் மாவட்ட நிர்வாகம் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கடந்து செல்லும் வாகனங்களில் சோதனைகளை அதிகமாக மேற்கொண்டு கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம், ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குஞ்சார்வலசை பகுதியில் அமைந்துள்ள காவல்துறை வாகன சோதனை சாவடியில், சுழற்சி முறையில் கூடுதலான போலீசார்களை நியமித்து கண்காணித்து கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குஞ்சார் வலசை பகுதியில் அமைந்துள்ள காவல் துறை வாகனச் சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்வதற்கு அதிநவீன கருவிகள் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். அதுபோல அதிக திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். சோதனை சாவடியில் அதிகமான விளக்குகள் அமைக்க வேண்டும். அங்கு பணியாற்றும் காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும்.

சோதனை சாவடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நடுமுனைக்காடு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குஞ்சார் வலசை பகுதியில் இருந்து கூடுதலாக பேரிக்காடு அமைக்க வேண்டும். மேலும் சோதனை சாவடியில் அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கண்காணித்து கடத்தலை தடுப்பதற்கு இந்த முயற்சிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ராமநாதபுரத்தில் இருந்து குஞ்சார்வலசை பகுதியில் அமைந்துள்ள காவல் துறை சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அரசு வாகனம் தனியார் வாகனம் உட்பட வாகனத்தின் உரிமை எண்களை பதிவு செய்ய வேண்டும்.

வாகன ஓட்டுனர்கள் ஆதாரங்களை பதிவு செய்தும், அதுபோல அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை சோதனை செய்தும், பின்னர் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த பகுதியில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் முயற்சியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.