Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மானாமதுரை நகரில் பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மானாமதுரை, செப்.17: மானாமதுரை பகுதியில் கடைகள், வாரச்சந்தைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு மானாமதுரை வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கானோர் வருகின்றனர். சராசரியாக 40 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. வாரச்சந்தைக்குள் அமைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறி, பழங்கள், இறைச்சிகள் உள்ளிட்டவற்றை ஒரு கிலோ, அரைகிலோ என்ற அளவில் வாங்குகின்றனர். இவ்வாறு வாங்கும், பொதுமக்களுக்கு வியாபாரிகள் தரம் குறைந்த 40 மைக்ரானுக்கு குறைவான பாலீத்தீன் பைகளில் பொருட்களை நிரப்பி தருகின்றனர்.

அதே போல தினசரி சந்தையில் பழங்கள், மீன், கோழி இறைச்சிகளும் இந்த சுகாதார கேட்டை ஏற்படுத்தும் பைகளில் வழங்கப்படுவதால் இவற்றை உபயோகப்படுத்தும் பொதுமக்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

பயன்பாட்டிற்கு பின்னும் இந்த பைகள் கழிவுநீர் வாய்க்கால், வைகை ஆற்றுக்குள் வீசியெறிப்படுவதால் இவை மண்ணில் தங்கி மட்காமல் நிலத்தடி நீரை மாசுபடுத்த வாய்ப்புள்ளது. எனவே மானாமதுரையில் பாலீத்தீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் பாலீத்தின் பைகள் புழக்கம் அதிகரித்து விடடது. புகார்கள் அதிகமாகும் போது மட்டும் அதிகாரிகள் கண்துடைப்பாக ஒருசில இடங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்று விடுகின்றனர். மட்காத குப்பைகளால் மானாமதுரை நகராட்சி தூய்மை பணிகளில் சிரமம் ஏற்படுகிறது. சில இடங்களில் ெபாதுமக்களே இவற்றை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதில் இருந்து எழும் புகை மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. எனவே மாதம் தோறும் கடைகளில் திடீர் சோதனை செய்து பிளாஸ்டிக் பாலீத்தீன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.