Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ராமநாதபுரம், ஜூலை 16: ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. உலக மக்கள் தொகை தினம், ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் அரண்மனை பஸ் நிலையத்தில் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பாக நாட்டுப்புற பண்பாட்டு கலைகுழுவினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவம் மற்றும் குடும்ப நல இயக்குநர் மருத்துவர் சிவானந்தவல்லி தலைமையிலும், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராமபூபதி, ரவி முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு இடையே சரியான பிறப்பு இடைவெளி இருக்கும் போது குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகள், எதிராக நடக்கும் வன்முறைகள், குழந்தை திருமணம், தற்காலிக கருத்தடை முறைகள், இரு குழந்தைகளுக்கிடையே தேவையான பிறப்பு, இடைவெளி போன்ற விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தப்பட்டது. இதில் குடும்பங்கள் துறை அலுவலர்கள் மற்றும் வட்டார சுகாதார புள்ளியலாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.