Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொண்டி பகுதி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

தொண்டி, ஜூலை 16: தொண்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகளை நேற்று கலெக்டர் ஆய்வு செய்தார். உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருவாடானை யூனியன் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் முகாம் நடப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நேற்று காலை தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு துவக்கப்பள்ளி, புதிய பேருந்து நிலையம், ரேசன் கடைகள் உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்க கோரியும், கூடுதல் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. தொண்டி பகுதிக்கு கலெக்டர் வருகையை எந்த துறை சார்பிலும் பொதுமக்களுக்கு தெரிவிக்காததால் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூற முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.