Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

கீழக்கரை, ஜூலை 16: கீழக்கரை அருகே நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வெள்ளா மரிச்சுக்கட்டி கிராமத்தில், குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் கிராமத்திலுள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். குடம் ஒன்றுக்கு ரூ.13 விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கிராம சபை கூட்டங்களில் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காலி குடங்களுடன் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.