Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லோக் அதாலத்தில் 853 வழக்குகளுக்கு தீர்வு

சிவகங்கை, ஜூன் 15: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 853 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 13 மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 352 குற்ற வழக்குகள், 195 செக்மோசடி வழக்குகள், 209 வங்கிக்கடன் வழக்கு, 585 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 377 குடும்ப பிரச்னை வழக்கு, 757 சிவில் வழக்கு என மொத்தம் 3ஆயிரத்து 110வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இதில் 782வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியே 82லட்சத்து 37ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. இதுபோல் வங்கி கடன் நிலுவை தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 575 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 71வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 54லட்சத்து 38ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி(பொ) ராமலிங்கம் மற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் லோக் அதாலத் ஏற்பாடுகளை செய்தனர்.