Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உலமாக்கள் டூவீலர் வாங்க மானியம்

சிவகங்கை, ஜூலை 13: பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானியத் தொகையுடன் டூவீலர் வாங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரிந்து வரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய டூவீலர் வாங்க மானியத் தொகை ரூ.50,000 வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள பணியாற்றும் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்களிடம் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதே அலுவலகத்தில் நாளை மறுநாள் மாலைக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.