Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்: 668 மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை, ஆக.12: சிவகங்கையில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாநில முழுவதும் கடந்த மாதம் பள்ளி அளவில் தொடங்கிய கலைத் திருவிழா போட்டிகள், தற்போது வட்டார அளவில் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதலின் படியும், உதவித் திட்ட அலுவலர் அழகர்சாமி மேற்பார்வையிலும், சிவகங்கை வட்டார அளவிலான போட்டிகள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மருதுபாண்டியர் நகர் மேல்நிலைப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கேஆர் மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெற்றது.

9-12ம் வகுப்புகளில் தலா 32 போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற தனிநபர் போட்டிகளும் மற்றும் குழு போட்டிகளும் நடைபெற்றன. இதில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலை பள்ளி என மொத்தம் 27 பள்ளிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 461 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 207 பேரும் என மொத்தம் 668 மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளி ஆசிரியர்களும் கலை வல்லுநர்களும் நடுவர்களாக பங்கேற்று அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவர்களை தேர்வு செய்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ரூபா ராணி, கலைத் திருவிழா வட்டார ஒருங்கிணைப்பாளர் புலவர் காளிராசா, ஆசிரியர் பயிற்றுநர்கள், முகமது காசிம், செந்தில்குமார், ஆறுமுகம், ஜெயபிரகாசம், தனலட்சுமி, கவிதா, தனலட்சுமி, சிறப்பாசிரியர்கள் கீதா, ராஜராஜேஸ்வரி, இயன்முறை மருத்துவர் ராஜேஸ்வரி, கணக்காளர்கள் காசிஸ்வரி சத்திய பிரியா, கணினி வரைவாளர் பத்மாஆகியோர் செய்திருந்தனர்.