Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தேவகோட்டை அருகே அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியது: 6 மாணவர்கள் காயம்

தேவகோட்டை, ஆக.12: தேவகோட்டை அருகே, மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி 6 மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலு நல்லாங்குடி விலக்கு அருகே நேற்று மதியம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஓரியூரில் இருந்து தேவகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில், எதிர்பாரத விதமாக அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் உடைந்து கீழே விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த ஆறு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பெரும் விபத்து ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.