Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்புவனத்தில் பலத்த மழை

திருப்புவனம், ஆக.12: திருப்புவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தநிலையில் நேற்று முன் தினம் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்றும் பலத்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 85.2 மிமீ மழையளவு பதிவான நிலையில், நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று பெய்த மழையால், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்முடி கரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படாததால் கழிவுநீரும் சாலையில் நிரம்பி ஓடியது. மழையால் கழிவுநீர் கால்வாய் நிரம்பி நெல்முடிகரை விஏஓ அலுவலகத்தில், மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் அலுவலக ஊழியர்கள் தண்ணீரை வாளி மூலம் அள்ளி வெளியேற்றி பெரும் அவதிப்பட்டனர்.