Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், மே 12: திருப்புத்தூர் சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர், ஸ்ரீ யோக பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு யோக பைரவர் சன்னதி முன்பு ஏராளமான பெண்கள் வெண்பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம், மண் அகல்விளக்கு உள்ளிட்டவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் நண்பகலில்  யோக பைரவருக்கு பால், சந்தானம், தயிர், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யோக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை பிரதோஷ் குருக்கள் செய்திருந்தார். இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.