Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு

மானாமதுரை, செப்.8: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மானாமதுரையில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் மண்பாண்ட ெதாழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரையில் மண்பாண்ட பொருள் தயாரிப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு என மண்பாண்ட கூட்டுறவு சங்கமும் செயல்பட்டு வருகிறது. வருகிற 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மானாமதுரையில் அரை அடி முதல் ஒன்பது அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரித்து வருகின்றனர். முற்றிலும் மண்ணால் தயாரிக்கப்பட்ட இந்த சிலைகளை தென்மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், சமுதாய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

குறிப்பாக அச்சில் செய்யப்பட்டு சுடப்பட்டு தயாரிக்கப்படும் அரை அடி, ஒரு அடி சிலைகள் அனைத்திற்கும் வர்ணம் தீட்டும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மண்பாண்ட ெதாழிலாளர்கள் கூறுகையில், ‘‘மானாமதுரை நகரம் மண்பாண்ட தொழிலுக்கு புவிசார் குறியீடு பெற்ற மிகவும் பிரசித்தி பெற்றது. சீசனுக்கு ஏற்ற மண்பாண்ட பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். சுற்றுப்புற சூழலை பாதிக்காத மண்ணால் மட்டுமே செய்யப்படும் பொருட்கள் என்பதால் பலரும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு தரமான மண் கிடைப்பதில்லை.

மண்பாண்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசு, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முறையாக கோரிக்கை வைக்கிறோம். மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. உயர்ந்து வரும் விறகு விலையால் மண் சிலைகளை சுடுவதற்கு அதிக செலவாகிறது. பொருட்களை கொண்டு செல்லும் வாடகை வாகனங்களின் விலையும் டீசல் உயர்வை காட்டிலும் அதிகரித்து விட்டன. அரசு மூலப்பொருட்களை பெறுவதற்கு மானியம், சலுகை விலை போன்றவற்றை செய்து உதவி செய்தால் தான், எதிர்காலத்தில் இந்த தொழிலை செய்ய முடியும் என்றனர்.