Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திருப்புத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்புத்தூர், ஏப்.8: திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் திமுக வேட்பாளர் அமைச்சர் பெரியகருப்பன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் பெரியகருப்பன், கடந்த ஏப்.3ம் தேதி பிள்ளையார் பட்டியில் தனது பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து அவர் ஆத்தங்கரைப்பட்டி, சம்பப்பட்டி, பனையம்பட்டி, வாணியங்காடு, கொளுஞ்சிப்பட்டி, வேலனிப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, உத்தமசாலை, புதூர், சிந்தாமணிப்பட்டி, மின்னல்குடிபட்டி, கருங்குளம், கத்தாழம்பட்டு, கருவேல்குறிச்சி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மூலம் பொதுமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற பல திட்டங்களை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக மகளிர் விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தாயுமானவர் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கான இல்லத்தரசி திட்டம், குழந்தைகளுக்கான காலை உணவு விரிவாக்க திட்டம், ஏழை மக்களுக்கான கலைஞர் கனவு இல்ல திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றப்ப்படும் என்றார். பிரசாரத்தில் கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.