Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தேங்காய், பழம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம்

சாயல்குடி, ஆக.7: முதுகுளத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தி உறி முடிச்சில் இருந்த தேங்காய், எலுமிச்சை பழங்கள் என பூஜை பொருட்களை ரூ.8லட்சத்து 10ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த பக்தர்கள். முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் 44ம் ஆண்டு கிருஷ்ணஜெயந்தி உற்சவ திருவிழா ஆக.29ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 4ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய், நெய், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. தேரில் உற்சவர் சாமி ஊர்வலம், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலையில் மஞ்சள் நீர் ஊற்றி உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது. உறி முடிஞ்சில் இருந்த தேங்காய், எலுமிச்சை பழங்கள், கயிறு,கம்பு ஆகியவை நேற்று பொது ஏலமிடப்பட்டது.

இதில் தேங்காயை சந்தோஷ்குமார் ரூ.2லட்சத்து 60ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். எலுமிச்சை பழங்களை வாணித்துரை, பிரவீன்குமார், வனிதா சசிகுமார் ஆகியோர் தலா ரூ.80ஆயிரத்திற்கும், நித்யா கோபிகிருஷ்ணன், குணமலர் சசிகுமார் ஆகியோர் தலா ரூ.65ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்தனர். இதுபோன்று பொன்மணி பூமிநாதன், கண்ணன் சிலை கையில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிறை ரூ.70ஆயிரத்திற்கும், நீலகண்டன் கஜேந்திரன் ஆகியோர் உறி இலுவை கயிற்றை ரூ.65ஆயிரத்திற்கும், தேரில் கண்ணன் தேரோட்டும் குச்சியை சர்வீன்சஞ்சீவ் ரூ.45ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்தனர்.

உறியடி உற்சவத்தில் பூஜிக்கப்பட்ட பொருட்கள் மொத்தமாக ரூ.8லட்சத்து 10ஆயிரத்திற்கு ஏலம் போனது. விழாவில் ஏலம் எடுக்கும் பொருட்களை வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் சுபகாரியங்கள் நடக்கும் என ஜதீகம் இருப்பதால் தொகை அதிகமாக இருந்தாலும் கூட அதனை பெரிது படுத்தாமல் ஏலம் எடுப்பதாகவும், இந்த தொகை கோயில் அன்னதானம், பராமரிப்பு மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.