Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையை கடந்த மான் பரிதாப பலி

திருவாடானை, செப்.5: திருவாடானை அருகே தொண்டி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடம்பாகுடி பகுதியில் இரை மற்றும் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அடிபட்டு உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரும், கால்நடை மருத்துவக் குழுவினரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பிறகு உடலை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று புதைத்து விட்டனர்.