காரைக்குடி, நவ. 3: காரைக்குடி செக்காலை தூயசகாயமாதா ஆலயத்தில் கல்லறை திருநாளை முன்னிட்டு காலையில் பங்குப்பணியாளர் அருள்முனைவர் சார்லஸ் இருதயம் இறந்தோரின் ஆன்மாவுக்காக திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து மாலை கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு அனைத்து கற்லறைகளையும் புனித நீரால் மந்திரித்து செபித்தார்.
அதேபோல் காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலய பங்குத்தந்தை கிளமென்ட் ராஜ், அரியக்குடி வளன்நகர் பங்குப் பணியாளர்அருள்ஆனந்த், ஆவுடைப்பொய்கை தூய அந்தோணியார் ஆலய பங்குபணியாளர் சாமுஇதயன், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயப் பங்குப் பணியாளர் எட்வர்டு ஜெயக்குமார் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி கல்லறைகளை மந்திரித்தனர்.


