Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மானாமதுரை வட்டாரத்தில்; தவறிய பருவம் மழையால் உரம் விற்பனை மந்தம்

மானாமதுரை: மானாமதுரை வட்டாரத்தில் பின்தங்கிய மழையால் உரம் விற்பனை சூடுபிடிக்கவில்லை. மானாமதுரை வட்டாரத்தில் வெள்ளிக்குறிச்சி, வாகுடி, முத்தனேந்தல், இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, கட்டிக்குளம், பெரும்பச்சேரி, மேட்டுமடை, கொம்புக்காரனேந்தல், தீத்தான்பேட்டை, மேலமேல்குடி, கால்பிரவு, பீசர்பட்டினம், ராஜகம்பீரம், கிருங்காகோட்டை, பாப்பாமடை உள்ளிட்ட பகுதிகள் வைகை ஆற்று பாசனத்தின் கீழ் உள்ளவை. கிழக்கு பகுதியான கொன்னக்குளம், குலையனூர், மாங்குளம், செய்யாலூர், மேலப்பிடாவூர், பில்லத்தி, விளாக்குளம், முத்துராமலிங்கபுரம், மாயாளி, வேளானி, சீகன்குளம், ஆலங்குளம் உள்ளிட்டவை வானம் பார்த்த பூமியாகும்.

இந்த பகுதிகள் அனைத்தும் பருவமழையை நம்பியே விவசாய செய்யப்படும் பகுதிகளாகும். வழக்கமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்கும் பருவமழை நவம்பர் வரை நீடிக்கும் இரண்டு மாதங்கள் பெய்யும் மழையில் குறைந்த கால விளைச்சல் ரகங்களான என்எல்ஆர், கோ35 போன்ற நெல் ரகங்கள் மூலம் நேரடி விதைப்பு, களை எடுப்பது உரமிடுவது போன்ற பணிகள் முடிந்து விடும். இந்தாண்டு அக்டோபர் 27ல் மழை துவங்கியதால் முதல் உழவு முடிந்து கனமழைக்கு விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வழக்கமாக நவம்பரில் உரமிடும் காலத்தில் விதைப்பு பணிகள் நடந்து வருவதால் உரவிற்பனை சூடுபிடிக்க வில்லை.

இது குறித்து உரவிற்பனையாளர்கள் கூறுகையில், ஒவ்ெவாரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடவு பணிகள் முடிந்து விடும். 50 நாட்களுக்குப்பின் நவம்பர் மாதம் முழுவதும் உரவிற்பனை அதிகரிக்கும். இந்த முறை பருவமழை பிந்தியதால் விவசாயிகள் தற்போதுதான் விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் பாசன பகுதிகளாக உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நாற்றாங்காலில் நெல்நாற்றுகள் பறித்து நடவு செய்யப்படாமல் உள்ளதால் மேற்குபகுதி விவசாயிகளும் வரவில்லை. யூரியா, கலப்பு உரம், பாஸ்பேட், களைக்கொல்லிகள் போன்றவைகள் போதிய அளவிற்கு ஸ்டாக் உள்ளது. தற்போது கிணற்று பாசனத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வந்து வாங்கி செல்கின்றனர் என்

றனர்.