பல்லடம், அக்.10: பல்லடம் கடை வீதியில் கடை போட கூடாது என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பல்லடம் கடை வீதியில் நகராட்சி நிர்வாகம், காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: திருவிழா காலங்களில் பொதுமக்கள் வந்த செல்ல ஏதுவாக என்.ஜி.ஆர்.சாலை, கடை வீதி, தினசரி மார்க்கெட் சாலை ஓரங்களில் எவ்வித தரைக்கடைகளும், கடைகளின் முன்புறம் டேபிள் வைத்து வியாபாரம் செய்வது கூடாது மீறினால் அறிவிப்பு ஏதுமின்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


