தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில் ₹40.49 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

வேலூர், டிச.7: வேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில் ₹40.49 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்து, விரைவில் பயன்பாட்டிற்கு ெகாண்டுவர அறிவுறுத்தினார். வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பகுதி- 1, 2008-2015 திட்டத்தின் கீழ் ₹40.49 கோடி மதிப்பீட்டில் 48.00 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய் அமைத்து 10.28 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 2ம் கட்டமாக அம்ரூத் திட்டத்தில் 2016-17 திட்டத்தின் கீழ் ₹690.91 கோடி மதிப்பீட்டில் 4 சிப்பங்களாக பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆசிய உலக வங்கி நிதியுதவியுடன் 421 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் அமைக்கவும், 50.00 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு கடந்த 2019 அன்று பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

Advertisement

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஆய்வின்போது இப்பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. தற்போது 401 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் நிறுவப்பட்டு சோதனையோட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வேலூர் சர்க்கார் தோப்பு பாதாள சாக்கடை திட்டம் குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனையோட்ட பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது அமைச்சர் ஆர்.காந்தி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, கலெக்டர் சுப்புலட்சுமி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணைச்செயலாளர் பிரதாப், துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, கண்காணிப்பு பொறியாளர் அரசு, காட்பாடி ேசர்மன் வேல்முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் இருந்தனர்.

Advertisement