Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குண்டுமல்லி விலை உயர்வு

சேலம், ஏப்.30: சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்ைல, ஜாதிமல்லி, காக்கட்டான், அரளி, சாமந்தி, சம்பங்கி உள்பட பல ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து அதிகரித்தது. திருவிழாக்கள், முகூர்த்தம் இல்லாததால் பூக்களின் தேவை சரிந்தது. இதனால் பூக்களின் விலை குறைந்தது. இந்த நிலையில் இன்று முகூர்த்தத்தையொட்டி பூக்களின் விலை அதிகரித்தது. நேற்று நிலவரப்படி குண்டுமல்லி கிலோ ரூ.400ஆக அதிகரித்தது. முல்லை பூ ரூ.240, காக்கட்டான் ரூ.280, கலர் காக்கட்டான் ரூ.200, மலைக்காக்கட்டான் ரூ.280, ஏற்காடு மலைக்காக்கட்டான் ரூ.280, அரளி ரூ.240, வெள்ளை அரளி ரூ.240, மஞ்சள் அரளி ரூ.240, செவ்வரளி ரூ.240, ஐ.செவ்வரளி ரூ.240, நந்தியாவட்டம் ரூ.300, சின்னநந்திவட்டம் ரூ.400, சம்பங்கி ரூ.160, சாதா சம்பங்கி ரூ.200 என விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.