சேலம், ஆக.29: சேலம் அய்யந்திருமாளிகை பகுதியில் நேசக்கரங்கள் ஆதரவு ஏற்கும் சிறுவர், சிறுமிகள் இல்லம், ஏற்காடு அடிவாரத்தில் முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. நேசக்கரங்களின் அறங்காவலர் குழு கூட்டம், முதியோர் இல்ல வளாகத்தில் நடந்தது. உதவி தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இல்ல செயலாளர் பெரியசாமி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அறக்கட்டளை தலைவராக பாஸ்கரன், உதவி தலைவர்களாக டாக்டர் சுகந்தி, குப்புரத்தினம் பிரபாகரன், செயலாளராக பெரியசாமி, பொருளாளராக பாலசங்கர் தேர்வு செய்யப்பட்டனர்.
அறங்காவலர்கள் சடையப்பன், கோவிந்தசாமி, இளங்கோ, டாக்டர் செல்வராஜ், பொறியாளர் பாஸ்கர் இத்தேர்வினை செய்தனர். கூட்டத்தில் இல்லவளர்ச்சி, முதியோர், குழந்தைகள் நலன் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இல்லத்தில் தற்போது 32பெண் குழந்தைகளும், 29ஆண் குழந்தைகளும், ஆண்கள்-பெண்கள் என்று 30 முதியோர்களும் பராமரிக்கப்பட்டு வருவதாக இல்ல செயலாளர் பெரியசாமி தெரிவித்தார்.



