Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சேலம் வழியே செல்லும் 2 ரயில்கள் தாமதமாகும்

சேலம், ஆக.29: சங்ககிரி அருகே ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று, இவ்வழியே இயங்கும் 2 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவேலிப்பாளையம்-சங்ககிரி துர்கம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணி இன்று (29ம் தேதி) நடக்கிறது.

இதனால், இம்மார்க்கத்தில் சேலம் வழியே இயக்கப்படும் எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (18190) குறிப்பிட்ட அப்பகுதியில் 45 நிமிடமும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) குறிப்பிட்ட அப்பகுதியில் 25 நிமிடமும் தாமதமாக இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.