சேலம், ஆக.28: விலைவாசி உயர்வு, வேலையில்லா திட்டாட்டம் ஆகியவற்றுக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ரயில் மறியல் போராட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி நடந்தது. சேலம் ஜங்சனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தவர்களை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதித்துறை நடுவர் திருமால் தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ்(51), சுந்தரம்(64), கண்ணதாசன்(40), கார்த்திக்(33), சந்தோஷ்குமார்(31) ஆகியோருக்கு, தலா ரூ.4500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.




