இடைப்பாடி, ஆக.28: இடைப்பாடி அருகே வாழகுட்டை ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக, வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் பேபி, ஆவணி பேரூர் கீழ்முகம் விஏஓ பர்வேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினார். லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், இடைப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விஏஓ பர்வேஸ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



