சேலம், ஆக.28: தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, தமிழக முதல்வர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சேலம் அரசு கட்டக்கல்லூரியில் எல்எல்பி பட்டப்படிப்பு பிரிவை தொடங்க வேண்டும், ஆங்கில பயிற்சி முகமையை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில், 4 கல்லூரிகளில் எல்எல்பி பட்டப்பிரிவு தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் சேலம் சட்டக்கல்லூரியும் ஒன்றாகும். இதையடுத்து வக்கீல் அய்யப்பமணி, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.



