ஓமலூர், செப்.26: சேலம் மாவட்டம், ஓமலூர் மசூதி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (43). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் முத்திரைத்தாள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு, பிரபு தனது வீட்டின் படுக்கையறையில் உள்ள சில்வர் பாத்திரத்தில் வைத்திருந்த பர்ஸை பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 12 பவுன் நகைகள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரபு ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


