ஆத்தூர், ஆக.26: ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அருகில் உள்ள முயல்கரடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி குமுதா(55). இவருக்கும் அருகில் உள்ள பெரியசாமி மகன் இளையராஜா(46), அவரது தம்பி வேல்முருகன்(45) ஆகியோருக்கு சொந்தமான பொது வழிப்பாதை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இளையராஜா மற்றும் வேல்முருகன் ஆகியோர் குமுதாவிடம் தகராறில் ஈடுபட்டு, பொது வழிப்பாதையை பொக்லைன் மூலம் சேதப்படுத்தினர்.
இதனால் குமுதா தனது விவசாய தோட்டத்துக்கு செல்ல முடியாமல் தவித்தார். இதுகுறித்து தலைவாசல் எஸ்ஐ மங்கையர்கரசனிடம் புகாரளித்தார். புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு பொது வழிப்பாதையை பொக்லைன் மூலம் சேதப்படுத்திய இளையராஜா, அவரது தம்பி வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



