சேலம், ஆக.26: சேலத்தில் போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். சேலம் பெரியபுதூர் மிட்டாபுதூரை சேர்ந்தவர் அஜித்குமார்(31), பிரபல ரவுடி. இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், தங்களது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில், அஜித்குமார் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில், அங்கிருந்து ரவுடி அஜித்குமார் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று ரவுடி அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



