Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராஜகணபதி கோயிலில் திருவிளக்கு பூஜை 2000 பெண்கள் பங்கேற்றனர்

சேலம், ஆக.26: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயிலில், கடந்த மே மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கடந்த 5ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. வரும் 30ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் 25 யாக குண்டங்கள், மற்றொரு இடத்தில் 21 யாக குண்டங்கள் என 46 குண்டங்களுடன் பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று 2000க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று (26ம் தேதி) தீர்த்தக்குட ஊர்வலம், நாளை (27ம் தேதி) சாந்தி பூஜைகள், 28ம் தேதி யாக சாலை பூஜையும், 29ம் தேதி 3ம் கால யாக பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, வரும் 30ம் தேதி காலை 7 மணி முதல் 8.35 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.