Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்

சேலம், செப்.25: சேலத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த ராசி பிளாட் பகுதியில் நேற்று கிச்சிப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டனர். இதில், போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விற்பனைக்காக அதனை வைத்திருந்த தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (26) மற்றும் அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்த மூர்த்தி (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 100 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.