சேலம், செப்.25:சேலம் அஸ்தம்பட்டி போலீசாருக்கு நேதாஜி நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அஸ்தம்பட்டி பகுதியில் கண்காணித்து வந்தனர். அந்தசமயத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து செல்வது தெரிந்தது.
மேலும் அவர்கள் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரை சேர்ந்த தனுஷ் ஆதித்யா (19), கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2.100கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் யாருக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றனர், எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


