சேலம், செப்.25: சேலம் கருப்பூர் பக்கமுள்ள டால்மியா போர்டு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த வடிவேல்(50), வாழதாசம்பட்டியை சேர்ந்த சக்தி(34), பாமன்காட்டை சேர்ந்த நடராஜ்(44) ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1500ஐ பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


