Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது

மேட்டூர், மே 25: தமிழக -கர்நாடக மாநில எல்லையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 1,000 கனஅடியாக சரிந்தது.

அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,027 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 471 கனஅடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 78.91 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 78.84 அடியானது. நீர் இருப்பு 40.81 டிஎம்சியாக உள்ளது.