Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொடுக்கல், வாங்கலில் தகராறு தலைமறைவாக இருந்த ரவுடி கைது

சேலம், மே 25: சேலத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது  செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவைச் சேர்ந்தவர் ஜேபி (45). இவரது அத்தை மகனான மணி என்பவர், தனது டூவீலரை அடமானம் வைத்து பணம் பெற்றுத் தரும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து ஜேபி தனக்கு தெரிந்தவரிடம் பணம் வாங்கி கொடுத்தார். இந்த விவகாரத்தில் இருதரப்பிற்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜேபி கட்டையால் தாக்கப்பட்டார்.

இதில் காயமடைந்த அவர், இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணி (42), முகமது அலி என்கிற மம்முது (55) ஆகிய இருவரையும், ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, பிரபல ரவுடியான கடம்பூர் முனியப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த இர்பான் அலி (22) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.