சேலம், அக்.22: சேலம் அன்னதானப்பட்டி கே.பி.கரடு அருகே, டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு மதுவிற்பனை செய்து கொண்டிருந்த காளிமுத்து(37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


