Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரேஷன் அரிசியை பதுக்கி விற்றவர் கைது 1.1 டன் பறிமுதல்

சேலம், ஆக.21: சேலம் அருகே சேலத்தாம்பட்டியில் ேரஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த குணா (27) என்பது தெரிந்தது. இவர் சேலத்தாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, பதுக்கி வைத்து லீபஜாரில் தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து பதுக்கி வைத்திருந்த 1.1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.