சேலம், ஆக.19: சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே வெள்ளி பொருட்கள் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அயோத்தியாப்பட்டணம் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் கலா (54). இவர் கடந்த மாதம் 16ம் தேதி திருநெல்வேலியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லை என தெரிந்த நபர்கள், ஜன்னலை உடைத்து உள்ளே சென்று திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



