இடைப்பாடி, ஆக.19: இடைப்பாடி அருகே உள்ள இருப்பாளி அக்கரைப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த பச்சாகவுண்டர் மனைவி முத்தாயி(65). இவரது மகள் மாதம்மாள்(48). இவரை குஞ்சாம்பாளையம் மணி என்பதற்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் கடந்த 5 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தனது தாய் முத்தாயுடன் மாதம்மாள் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாதம்மாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அக்கம்-பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்தாயி பூலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து மாதம்மாளை தேடி வருகிறார்.




