வாலிபரை தாக்கிய 2 பேர் அதிரடி கைது
சேலம், செப்.18: சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் சல்மான் (33). இவரிடம் லைன்மேடு பென்சன் லைன் பகுதியை சேர்ந்த ஹாரூன் (33) என்பவர் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை சல்மான் திரும்ப கேட்டு வந்த நிலையில், கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 13ம் தேதி ஹாரூனிடம் பணத்தை திரும்ப கேட்ட சல்மானை, அவரும், அவரது நண்பரான சையத் பயாஸ் என்பவரும் சேர்ந்து உருட்டுக்கட்டை, கல்லால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சல்மான், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் தேடி வந்தனர். நேற்று மாலை, ஹாரூன் (33), சையத் பயாஸ் (38) ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.