Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம், டிச.17: சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடப்பு மாதத்திற்கான கூட்டம் நாளை மறுநாள் (19ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம், என கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.