Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காமன்வெல்த் வாள் வீச்சு போட்டியில் வாழப்பாடி வீராங்கனை தங்கம் வென்று சாதனை

வாழப்பாடி, ஆக.14: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் பரஞ்ஜோதி (58). இவர் விறகு விற்பனை செய்து வருகிறார். இவரது மகள் கனகலட்சுமி. வாள் வீச்சு வீராங்கனையான இவர், தமிழ்நாட்டில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், நைஜீரியா நாட்டில் நடந்த காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்ட கனகலட்சுமி, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தந்த அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி, கனகலட்சுமியை பாராட்டினார். இதேபோல், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவனும் கனகலட்சுமியை வாழ்த்தினார்.