சேலம், ஆக.14: சேலம் அடுத்த ஆட்டையாம்பட்டி பெரிய சீரகாபாடியை சேர்ந்தவர் கந்தசாமி (83). இவர் திருமண இடைத்தரகராக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கந்தசாமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது உறவினர் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



