சேலம், ஆக.14: சேலம் தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரையை கடத்தி வந்து விற்கப்படுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாதகாப்பட்டி கேட் பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
இதில், 2 பேரிடம் இருந்த பையில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் தாதகாப்பட்டி தனுஷ்(32), அரூர் பார்த்திபன்(36) என்பது தெரிந்தது. இவர்கள் இருவரும் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்க வந்ததும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை கஞ்சா விற்பதற்கு அங்கே அனுப்பி வைத்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



