கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
கெங்கவல்லி, நவ.13: ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணி(40). இவர் தனது விவசாய தோட்டத்துக்கு கிணற்று பக்கமாக சென்ற போது, கால் தடுமாறி கிணற்றில் விழுந்தார். சுமார் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து கூச்சலிட்டுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடம் வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, சுப்ரமணியை வலையில் கட்டி மேலே தூக்கி உயிருடன் மீட்டனர். கிணற்றில் கீழே விழுந்ததில் சுப்ரமணிக்கு உடல் முழுவதும் லேசான காயம் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
Advertisement
Advertisement