சேலம், நவ.13: சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (37). இவர் அப்பகுதியில் உள்ள பேக்கரியில் கடந்த 9 வருடங்களாக காசாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி வழக்கம்போல் சுந்தர் கடையில் இருந்தார். அப்போது சிறுவன் ஒருவன் மதுபோதையில் வந்து, சுந்தரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், சுந்தரை தாக்கி அங்கிருந்த குளிர்பான பாட்டிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுபற்றி சுந்தர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
