சேலம், ஆக.13: சேலம் டவுன் 2வது அக்ரஹாரம் பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 10ம் தேதி இரவு பூஜையை முடித்து பூசாரிகள் பூட்டி சென்றனர். அடுத்தநாள் காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கோயிலில் வைத்திருந்த பஞ்சமுக விளக்கு, பூஜை தட்டு உள்ளிட்ட பூஜை செய்யும் பொருட்கள் திருடு போயிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து கோயில் பூசாரி செந்தில் ஞானகிரி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் கோயிலுக்கு சென்று விசாரித்தனர். அப்போது, பூட்டியிருந்த கோயிலின் கதவை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பூஜை பொருட்களை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



