Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஏற்காடு மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு, ஆக.13: ஏற்காடு மலைப்பாதையில், 8வது கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் உள்ள பெரிய மரம் மற்றும் கொடிகள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.

நல்வாய்ப்பாக மரம் விழுந்த வேளையில், வாகனங்கள் வராததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மரங்களை அகற்றும் பணியால் ஒரு மணி நேரம் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மரங்களை அகற்றிய பின்னர், போக்குவரத்து சீரானது.