Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோரிமேடு அரசு ஐடிஐயில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

சேலம், ஆக.12: சேலம் கோரிமேடு அரசு ஐடிஐயில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. முகாமை துணை இயக்குநர் சந்திரா தொடங்கி வைத்தார். இதில் 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பொறியியல், கலை அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 18 நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்தன.

அவர்களுக்கு சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அமலா ரெக்சலின் ஆணை வழங்கினார். இதுகுறித்து ஐடிஐ அதிகாரிகள் கூறுகையில், “தொழில் நிறுவனங்களில் மாணவர்கள் தொழிற்பழகுநராக சேர்ந்து பயிற்சி பெறும் போது தொழில் அனுபவம் கிடைக்கும். பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்,’’ என்றனர்.